Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பப்பாளி பழம் ரூ.47 வரை விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

பப்பாளி பழம் ரூ.47 வரை விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ பப்பாளி பழத்தின் விலை ரூ.30-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.45 முதல் ரூ.47 வரை விற்பனையாகிறது.

பகிரவும் WhatsApp Facebook

பப்பாளி பழத்தின் விலை வேலூரில் ஏறுமுகத்தில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம் தாலுகாக்களில் 220 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி பயிரிடப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறு விவசாயிகளும் தங்களது நிலங்களில் பப்பாளி பயிரிட்டு, விற்பனை செய்கின்றனர். 

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பப்பாளி பழத்தின் விலை ரூ.30-ஆக இருந்த நிலையில், தற்போது கிலோ ரூ.45 முதல் ரூ.47 வரை விற்பனையாகிறது.

வேலூர் மற்றும் காட்பாடி உழவர் சந்தை, வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பப்பாளி அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்தும் பப்பாளி வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தரமான பப்பாளியை தேர்வு செய்து வாங்குகின்றனர். 


 அதேநேரத்தில், விலையும் கணிசமாக உயர்ந்து இருப்பதால், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி
FSSAI scrutiny on food firms, quick-commerce platforms
அடுத்த செய்தி
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெகா சைஸ் பூஞ்சை!

தொடர்புடைய செய்திகள்